Home Search
Sania Mirza - search results
If you're not happy with the results, please do another search
பெட் கோப்பை: காயத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்கும் சானியா அசத்துவாரா?
மகளீர் குழு டென்னிஸ் போட்டியான பெட் கோப்பை நாளை முதல் துபாயில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி இடம்பெற்றுள்ளது. இதில் அனுபவ வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா, ருதுஜா போசலே, ரியா பாட்டியா ஆகியோ இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய சானியா மிர்சா தற்போது முழு உடற்தகுதிப் பெற்று களமிறங்க உள்ளார். பெட் கோப்பை டென்னிஸ் தொடர் பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு கொரோனா வைரஸ்...
கத்தார் ஓபன்: முதல் சுற்றில் தோல்வி அடைந்து சானியா மிர்சா ஏமாற்றம்
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தோஹாவில் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை சானியா மிர்சா பங்கேற்றார். இவர் இத் தொடரில் காரோலின் கார்சியாவுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் களமிறங்கினார்.
சானியா-கார்சியா ஜோடிக்கு வைல்ட் கார்டு முறையில் தகுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் சுற்றுப் போட்டியில் சானியா-கார்சியா ஜோடி காக்லா-லாரா சேக்மண்ட் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் சானியா-கார்சியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். எனினும் முதல் செட்டின்...
டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்ற ஆட்டோ டிரைவர் மகள்
12 வயதுக்குட்பட்டோருக்கான ரமேஷ் தேசாய் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்
மகாராஷ்டிராவில் நடைபெற்றது. இத்தொடரில், ஆட்டோ டிரைவரின் 11 வயதேயான மகளான தானியா
இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், நானிகா ரெட்டி - தானியா
மோதினர். இப்போட்டியில் 6-2, 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் தானியா போட்டியை வென்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மட்டுமின்றி, இரட்டையர் பிரிவு போட்டியிலும்
தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
நானிகா ரெட்டியுடன் ஜோடி சேர்ந்த தானியா,...
ஜனவரி ரவுண்ட் அப்: சானியா கம்பேக் முதல் ராணி ராம்பால் விருது வரை முக்கிய தருணங்கள்
இந்தாண்டின் முதல் மாதத்தின் கடைசி நாள் இன்று நாம் இருக்கிறோம். 2020ஆம் ஆண்டு விளையாட்டு உலகில் மிகவும் முக்கியமான ஆண்டு. ஏனென்றால் இந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த ஆண்டை பல விளையாட்டு வீரர்கள் தங்களது கனவு நிறைவேறும் ஆண்டாக கருதி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் மாதம் இந்திய விளையாட்டிற்கு ஒரு சிறப்பான தொடக்கமாகவே மாறியுள்ளது. இந்த மாதத்தில் நடந்த சில முக்கிய தருணங்களை நாம்...
பெட் கோப்பை டென்னிஸ்: விலகினால் சானியாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகுமா?
மகளீர் குழு டென்னிஸ் போட்டியான பெட் கோப்பை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் அனுபவ வீராங்கனை சானியா மிர்சா இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து ரியா பாட்டியா, ருதுஜா போசேலே உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக அங்கிதா பாம்ப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டிகள் சீனாவில் நடைபெற இருந்தது. எனினும் சீனாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு உள்ளதால் அங்கு விளையாட இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்...
ஆஸ்திரேலியன் ஓபன்: காயம் காரணமாக சானியா மிர்சா மகளீர் இரட்டையர் போட்டியிலிருந்து விலகல்
ஆஸ்திரேலியன்
ஓபன் தொடரில் மகளீர் இரட்டையர்
பிரிவில் இந்தியாவின் சானியா
மிர்சா மற்றும் உக்ரேன்
நாட்டின் நாடியா ஜோடி
களமிறங்கியது.
இந்த
ஜோடி முதல் சுற்றில் சீனாவின்
சின்யூன் ஹன் மற்றும் லின்
சூ இணைய எதிர்கொண்டது.
இந்தப்
போட்டியில் முதல் செட்டை
சானியா ஜோடி 2-6
என்ற
கணக்கில் இழந்தது.
இதனைத்
தொடர்ந்து முதல் செட்டின்
முடிவில் சானியா மிர்சா
மருத்துவ சிகிச்சைக்கு அவகாசம்
பெற்றார்.
பின்னர்
சிகிச்சை பெற்று இரண்டாவது
செட்டில் பங்கேற்றார்.
இரண்டாவது
செட்டின் முதல் கேம்மை சீனா
ஜோடி கைப்பற்றியது.
அப்போது
மிகவும் தடுமாறிய சானியா
காயத்தால் போட்டியிலிருந்து
விலகுவதாக அறிவித்தார்.
இதனால்
சீன ஜோடி இரண்டாவது சுற்றிற்கு
முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா மிர்சா காயம்;போபண்ணா தோல்வி, திவிஜ் சரண் வெற்றி
ஆஸ்திரேலியன்
ஓபன் தொடர் டென்னிஸ் போட்டிகள்
தற்போது ஆஸ்திரேலியாவில்
நடைபெற்று வருகின்றன.
இந்தத்
தொடரில் இந்தியா சார்பில்
ஆடவர் ஒற்றையர் போட்டியில்
களமிறங்கிய பிரஜ்னேஷ் முதல்
சுற்றில் தோல்வி அடைந்து
ஏமாற்றினார்.
இதனால் ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் அசுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஜப்பானின் உசியாமா ஜோடி அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களை எதிர்கொண்டது.
ரோகன் போபண்ணா
ஆஸ்திரேலியன் ஓபன்: ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரஜ்னேஷ் தோல்வி
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று தொடங்கியது. நேற்று ஆஸ்திரேலியாவில் மழை பெய்ததால் சில போட்டிகள் நடைபெறவில்லை. அவை அனைத்து இன்று நடைபெற்று வருகின்றன.
இந்தத்
தொடரின் ஆடவர் ஒற்றையர்
பிரிவிற்கு இந்தியாவின்
பிரஜ்னேஷ் குணேஸ்வரன் லக்கி
டிரா மூலம் தகுதி பெற்றார்.
இவர்
ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில்
தோல்வி அடைந்தவர்களுக்கு
நடத்தப்பட்ட லக்கி டிரா மூலம்
ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு
தகுதி பெற்றார்.
இந்நிலையில்
இவர் தனது முதல் சுற்று
ஆட்டத்தில் ஜப்பானின் டட்சுமா
இட்டோவை...
இரண்டரை வருட இடைவேளைக்கு பிறகு களமிறங்கி அசத்தும் சானியா !
உலக
டென்னிஸ் அரங்கில் மிகவும்
முக்கிய வீராங்கனைகளில்
ஒருவர் இந்தியாவின் சானியா
மிர்சா.
இவர்
தொடக்கத்தில் ஒற்றையர்
பிரிவில் அதிக கவனம் செலுத்தி
வந்தார்.
பின்னர்
2013ஆம்
ஆண்டிற்கு பிறகு இரட்டையர்
போட்டியில் மட்டும் அதிக
கவனம் செலுத்த தொடங்கினார்.
அதன்
விளைவாக 2015ஆம்
ஆண்டு விம்பிள்டன் மற்றும்
அமெரிக்க ஓபன் ஆகிய இரண்டு
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில்
மகளீர் இரட்டையர் பிரிவு
பட்டத்தை கைப்பற்றினார்.
அந்த
ஆண்டு இவர் அனுபவ வீராங்கனை
மார்டினா ஹிங்கிஸ் உடன் ஜோடி
சேர்ந்து களம் கண்டார்.
இவருக்கும்
பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட்
வீரர் சோயிப் மாலிகிற்கும்
கடந்த 2010ஆம்
ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த
திருமணத்தால் சானியா மிர்சா
மீது சர்ச்சை எழுந்தது.
அத்துடன்
அவர் இந்தியாவிற்காக டென்னிஸ்
போட்டிகளில் பங்கேற்பாரா
என்ற கேள்விகளும் எழுந்தது.