திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
If you're not happy with the results, please do another search.
Home Search

Chennaiyin FC - search results

If you're not happy with the results, please do another search

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னையின் எஃப்சி வீரர்கள்!

புதிதாக இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லை பகுதியில் விவசாயிகள் 75 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கடும் சூழலையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகளுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையின் எஃப்சி வீரர்கள் சிலர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சூசைராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல அனிருத் தாபா, “நாம் மக்களாட்சி முறையில் செயல்பட்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்”...

ஐஎஸ்எல் 2020-21: சென்னை அணி வெற்றி; அனிருத் தாபா சாதனை படைத்தார்

அனிருத் தாபா இந்த சீசனில் கோல் அடித்த முதல் இந்தியர்
கோவாவில் நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது சென்னையின் எப் சி அணி. ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. தமிழக வீரர் எட்வின் அணியில் இல்லாத சோகம் ரசிகர்களின் வெகு விரைவில் மறந்தது. காரணம், ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அற்புதமான கோல் அடித்து அசத்தினார் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான அனிருத் தாபா. இதன் மூலம் இந்த சீசனில் கோல் அடித்த முதல் இந்தியர்...

ஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியிருந்தாலும் தமிழகக் கால்பந்து ரசிகர்களைகப் பொறுத்தவரை இன்று தான் முதல் ஆட்டம். காரணம், சென்னையின் எப் சி அணி தனது முதல் ஆட்டத்தை இன்று தான் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான முதல் ஆட்டம் என்பதையும் தாண்டி ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான இந்த ஆட்டத்தின் மேல் வேறு சில எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஏனென்றால் கடந்த சீசனில் சென்னை அணியின் அபார ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இரண்டு முக்கிய தூண்களாக இருந்த...

‘புதுக்கோட்டையிலிருந்து கோவிந்தன் லக்‌ஷ்மணன்’- தந்தையை இழந்த மகனின் சாதனைப் பயணம்!

தடகள போட்டிகளில் மிகவும் கடினமாக பார்க்கப்படும் போட்டிகள் என்றால் அது 5000 மற்றும் 10000 மீட்டர் ஓட்டப்பந்தையங்கள் தான். இந்தப் பிரிவு ஓட்டப் பந்தையங்களில் இந்தியா சார்பில் பலர் பங்கேற்றுள்ளனர். இருப்பினும் அவர்களில் இருந்து சற்று மாறுபட்டு சாதித்தவர் தான் கோவிந்தன் லக்‌ஷ்மணன். புதுகோட்டை மாவட்டம் கவிநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் லக்‌ஷ்மணன். இவருடைய தந்தை விவசாயம் செய்து வந்தார். இவரின் தாய் ஜெயராணி கூலி தொழில் செய்து வந்தார். கோவிந்தனுக்கு 6வயதாக இருந்த போது அவரின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனைத்...

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கும் மகளிர் கால்பந்து திருவிழா!

கர்நாடக மாநிலத்தில் மகளிர் கால்பந்து போட்டிகளுக்கு அம்மாநில கால்பந்து சங்கம் அதிகம் ஆதரவு அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு மகளிர் கால்பந்து லீக் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இன்டிமெஸ்ஸி கால்பந்து லீக் தொடர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘நாயுடு ஹால்’ நிறுவனம் ஸ்பான்சராக உள்ளது. இந்தத் தொடரில் 10 அணிகள் களமிறங்க உள்ளன. இந்தத் தொடருக்கான பத்திரிகை பார்ட்னராக ‘த பிரிட்ஜ்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நாயுடு ஹால் துணைத் தலைவர்...

‘மேரா நாம் ஹை வாஷிங்டன்’- ரிஷப் பண்ட்டின் ஜாலியான கமெண்ட் வீடியோ

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் கடந்து அசத்தினார். இன்றைய போட்டியின் 70ஆவது ஓவரை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீசினார். அப்போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் வாஷிங்டன் சுந்தரின் பெயரை வைத்து ஜாலியாக கமெண்ட் அடித்தார். அவர், ‘மேரா நாம் ஹை வாஷிங்டன்; மேரே...

ஐஎஸ்எல்: நடுவர்களின் முடிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் சென்னையின் எப்சி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் கோவாவில் நடந்து வருகிறது. இரண்டு முறை பட்டம் வென்ற அணியும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியுமான சென்னையின் எப் சி அணி இந்த முறை தங்களது பயணத்தை ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிராக வெற்றியுடன் தொடங்கினர். கேரளா பிலாஸ்டர்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறா விட்டாலும் சிறப்பாகவே விளையாடினர். இதனால் சென்னையின் எப் சி அணி தங்களது மூன்றாவது ஆட்டத்தில் அவர்களின் முக்கிய எதிரணியான பெங்களூரு...

ஐஎஸ்எல்: தவறுகளை சரி செய்து மும்பைக்கு எதிராக வெற்றி பெறுமா சென்னையின் எப்சி?

கோவாவில் நடந்து வரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனில் சென்னையின் எப் சி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் மூன்று விதமான முடிவுகள் வந்துள்ளது. அனைத்து போட்டிகளிலும் ஒரே வீரர்கள் கொண்ட முதல் அணியினையே மேனேஜர் லாஸ்லோ ஆடவைத்தார். முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறிது சொதப்பினார்கள்‌. குறிப்பாக அணியின் கேப்டன் ரஃபேல் கிரிவெல்லாரோவின் ஆட்டம் அத்துனை சிறப்பானதாக இல்லை. மேலும் பெங்களூரு எப் சி அணிக்கெதிரான போட்டியில் துவக்கத்திலேயே நட்சத்திர வீரர் அனிருத் தாபா காயமடைந்ததும் அணிக்கு பெரும்...

ஐஎஸ்எல்: சென்னையின் எப்சியின் முதல் மூன்று ஆட்டங்களின் அலசல்

ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனில் சென்னையின் எப் சி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் மூன்று விதமான முடிவுகள் வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கினாலும் அடுத்த ஆட்டங்களில் சமன் மற்றும் தோல்வியே வந்துள்ளது. இந்த மூன்று ஆட்டங்களிலும் அணியின் மேனேஜர் ஷாபா லாஸ்லோ ஒரே அணியினையே ஆடவைத்தார். முதல் ஆட்டத்தில் அதிரடியாக தொடங்கி கோல்கள் அடித்து அசத்தினாலும் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணிக்கெதிராக கோல் அடிக்காவிட்டாலும் சென்னை அணி நிறைய...

ஐஎஸ்எல்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை-பெங்களூரு போட்டியில் வெல்லப் போவது யார்?

கோவாவில் நவம்பர் 20 தொடங்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனில் ஆட்டங்கள் மெல்ல மெல்லச் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் பலம்வாய்ந்த சென்னையின் எப் சி மற்றும் பெங்களூரு எப் சி அணிகள் மோதுகின்றனர். பெங்களூரு அணி 2017 ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் இணைந்தது முதலே இவ்விரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரண்டு அணிகளும் மோதிய அனைத்து போட்டிகளிலும் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனல் பறந்தது. இதில் முத்தாய்ப்பாக பெங்களூரு அணிக்கெதிரான 2017...