புதன்கிழமை, அக்டோபர் 28, 2020
Home அண்மை செய்திகள் ஐபிஎல்: தோனி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த 16வயது மாணவன் கைது

ஐபிஎல்: தோனி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த 16வயது மாணவன் கைது

ஐபிஎல் போட்டியின் தோல்வியை தொடர்ந்து அடையாளம் தெரியாத ரசிகர் ஒருவர் தோனியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தலை விடுத்தார்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஃபார்மில் உள்ளது. எப்போதுமே ஐபிஎல் தொடரில் ஒரு அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை இம்முறை அதற்கு மாறாக சற்று தடுமாறி வருகிறது. சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் கவலையளிக்கும் நிலையில் உள்ளது.

அத்துடன் கேப்டன் தோனியின் பேட்டிங் ஃபார்மும் சரியாக இல்லை. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னையில் அணி கடைசி ஓவரில் எதிர்பாரத விதமாக தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வியை தொடர்ந்து அடையாளம் தெரியாத ரசிகர் ஒருவர் தோனியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தலை விடுத்தார்.இந்த அச்சுறுத்தலை அவர் தோனியின் மனைவி சாக்‌ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து ராஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அந்த நபர் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

தோனி

இதனையடுத்து ராஞ்சி காவல்துறையினர் அந்த மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொண்டு 16வயது இளைஞர் கைது செய்ய உதவி கேட்டனர். அதனை ஏற்ற குஜராத் காவல்துறையினர் அந்த 16வயது இளைஞரை கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த இளைஞரை ராஞ்சி காவல்துறையினரிடம் குஜராத் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.

தோனியின் மகளுக்கு வந்த இந்த பாலியல் அச்சுறுத்தலை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்தை குறித்து மட்டும் விமர்சனம் செய்யவேண்டும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களின் குடும்பத்தை விமர்சிப்பது எப்போதும் தவறான செயல் என்று பலர் தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல்: ”ஆட்டநாயகன் விருதை வென்ற நான்…”- மனம்திறந்த அஸ்வின்

ஐபிஎல்: ‘டிராப் கேட்ச் டூ அரைசதம்’- ட்ரோலுக்கு திவேட்டிய பாணியில் பதிலளித்த விஜய் சங்கர் 

விஜய் சங்கர்
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் கொடுத்த கேட்சை விஜய் சங்கர் தவறவிட்டார்.  இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் அவரை ரசிகர்கள் வசைப்பாட தொடங்கினர். இவரை பலரும் ட்விட்டரில் ட்ரோல் செய்ய தொடங்கினர். ஏனென்றால் நடப்பு ஐபிஎல்...