TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பிபிஎல்: வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்த நடப்புச் சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ்

பிபிஎல்: வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்த நடப்புச் சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ்
X
By

Ashok M

Published: 6 Feb 2020 4:59 PM GMT

பிபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ் அணி அவாதி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலாவதாக ஆடவர் இரட்டையர் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூருவின் ஜார்ஜ்-சபுட்ரோ ஜோடி அவாதி வாரியர்ஸ் அணியின் சன் ஹூன் -சீயோல் இணையை எதிர்கொண்டது.

இரு ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பு அடைந்தது. இறுதியில் 14-15,15-7,15-11 என்ற கணக்கில் சன் ஹூன்-சீயோல் ஜோடி வெற்றிப் பெற்றது.

அவாதி வாரியர்ஸ்

இரண்டாவதாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பெங்களூருவின் லெவெர்டெஸ் அவாதி அணியின் அஜய் ஜெயராம் மோதினர். இது அவாதி அணிக்கு ட்ரம்ப் போட்டியாக இருந்தது. எனினும் இப்போட்டியில் அவாதி அணியின் ஜெயராம் லெவெர்டெஸிடம் 9-15,9-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் பெங்களூரு ரப்டர்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான தா சு யிங் அவாதி அணியின் சாங்கை எதிர்கொண்டார். இதில் 15-12,15-12 என்ற கணக்கில் தா சு யிங் வெற்றிப் பெற்றார். நான்கவதாக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ரப்டர்ஸ் அணியின் சாய் பிரணீத் அவாதி அணியின் வின்சென்ட்டிற்கு எதிராக மோதினார். இது பெங்களூரு ரப்டர்ஸ் அணிக்கு ட்ரம்ப் போட்டியாக இருந்தது.

பி.பி.எல் பேட்மிண்டன்

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட சாய் பிரணீத் 15-11,15-13 என்ற கணக்கில் வின்சென்ட்டை தோற்கடித்து பெங்களுரு அணிக்கு மேலும் 2 புள்ளிகளை பெற்று தந்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடைசி போட்டியான கலப்பு இரட்டையர் போட்டியில் பெங்களூருவின் சென்-வான் ஜோடி அவாதியின் சன் ஹூன்-பெடர்சன் இணையை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் அவாதி அணியின் சன் ஹூன்-பெடர்சன் இணையை 15-7,12-15,11-15 என்ற கணக்கில் பெங்களூரு இணையான சென்-வான் ஜோடி வீழ்த்தியது . இறுதியில் 5-0 என்ற கணக்கில் பெங்களூரு ரப்டர்ஸ் அணி அவாதி வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது.

இதன்மூலம் 2020ஆம் ஆண்டு பிரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், புனே 7 ஏசஸ், பெங்களூரு ரப்டர்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதி நாளையும் இரண்டாவது அரையிறுதி போட்டி வரும் சனிக்கிழையும் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

Next Story
Share it