வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6, 2020
If you're not happy with the results, please do another search.
Home Search

sports - search results

If you're not happy with the results, please do another search

கொரோனா வைரஸ் பாதிப்பு: விளையாட்டு வீரர்களுக்கு நிதி திரட்டிய சரத் கமல் -சத்யன் 

சத்யன் -சரத் கமல்
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் விளையாட்டு துறையிலும் பெரிய அளவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நடுவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.  இவர்களுக்கு உதவும் விதமாக இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களான சரத் கமல், சத்யன் மற்றும் வீராங்கனை நேஹா அகர்வால் ஆகியோர் நிதி திரட்டினர். இதற்காக ‘our chance to serve’ என்ற வாசகத்தை வைத்து இவர்கள் நிதி...

சச்சினுக்கு விருது, டேபிள் டென்னிஸில் அசத்திய தமிழக வீரர்கள் – பிப்ரவரி ஸ்போர்ட்ஸ் ரவுண்டப்

சச்சின் சரத் கமல் சத்தியன்
இந்தப் பிப்ரவரி மாதத்தில் விளையாட்டு களத்தில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல மகத்தான செயல்களை செய்தனர். அவற்றை நீங்கள் படிக்க தவறியிருந்தால், இதோ உங்களுக்கான ஸ்போர்ட்ஸ் ரவுண்டப். சொந்த மண்ணில் கடைசி டென்னிஸ் தொடரை இழந்த பயஸ்: இந்தியாவின் அனுபவ டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2020ஆம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் இந்தியாவில் தனது கடைசி தொடராக ஏடிபி பெங்களூரு சேலஞ்சரில் களமிறங்கினார்.  சொந்த மண்ணில் தனது கடைசி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயஸ்...

‘நாங்கள் அனைவரும் தனி நபராக தான் பாகிஸ்தான் சென்றுள்ளோம்’- கபடி அணி பயிற்சியாளர்

சர்க்கிள் கபடி அணி
7-வது சர்க்கிள் ஸ்டைல் உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் வாகா எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் சென்றனர். அவர்கள் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறாமல் சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இந்த அணியின் பயிற்சியாளராக சென்றுள்ள ஹர்பிரீத்...

“பதக்க வீரர்களுக்கு, வாழ்நாள் ஓய்வூதியம்” விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு

கிரன் ரிஜிஜு
சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்கான வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு, உலக கோப்பை, மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு ஆகிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 30 வயது நிறைவடைந்தவுடன் அல்லது விளையாட்டில் இருந்து...

“பத்ம விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை யார் தேர்வு செய்கிறார்கள்?”- மல்யுத்த வீராங்கனை வினேஷ் காட்டம்

வினேஷ் போகட்
கடந்த சனிக்கிழமை நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு பத்ம விபூஷன் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது. மேலும் 6 விளையாட்டு வீரர்களுக்கு பத்மஶ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளுக்கான வீரர்கள் பரிந்துரைப்புப் பட்டியலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விருதுகள் குறித்து மல்யுத்த...

இரண்டரை வருட இடைவேளைக்கு பிறகு களமிறங்கி அசத்தும் சானியா !

சானியா மிர்சா
உலக டென்னிஸ் அரங்கில் மிகவும் முக்கிய வீராங்கனைகளில் ஒருவர் இந்தியாவின் சானியா மிர்சா. இவர் தொடக்கத்தில் ஒற்றையர் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின்னர் 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இரட்டையர் போட்டியில் மட்டும் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். அதன் விளைவாக 2015ஆம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மகளீர் இரட்டையர் பிரிவு பட்டத்தை கைப்பற்றினார். அந்த ஆண்டு இவர் அனுபவ வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் உடன் ஜோடி சேர்ந்து களம் கண்டார். இவருக்கும் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிகிற்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தால் சானியா மிர்சா மீது சர்ச்சை எழுந்தது. அத்துடன் அவர் இந்தியாவிற்காக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்விகளும் எழுந்தது.