சனிக்கிழமை, ஜனவரி 16, 2021
If you're not happy with the results, please do another search.
Home Search

cricket - search results

If you're not happy with the results, please do another search

ஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் !

தமிழர் பாரம்பரியங்களுடன் மிகவும் ஒன்று இருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் தான். உழவர் திருநாளான இன்று தமிழ் மக்கள் அனைவரும் மதபேதமின்றி தங்கள் வீட்டுகளில் பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தங்களின் அறுவடைக்கு பிறகு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று மகிழ்வார்கள். இதற்காக நமது தமிழ் பண்பாட்டில் பல பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. இதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் ஜல்லிக்கட்டு. உழவன் தனது விவசாயத்திற்கு பயன்படும் காளை மாடுகளை தழுவி பிடித்து விளையாடும்...

‘தேசிய கீதத்திற்கு கண்ணீர் விட்ட சிராஜ்’- தோனியின் வார்த்தைகளை கூறி ஆறுதல் அளித்த ஜாஃபர்!

இளம் வீரர் முகமது சிராஜ் இந்திய தேசிய கீதம் இசைத்து கொண்டிருந்தப் போது கண்ணீர் விட்டு அழுதார்.
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்கள் தங்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக களத்தில் அணிவகுத்து நின்றனர். அப்போது இந்திய அணியின் இளம் வீரர் முகமது சிராஜ் இந்திய தேசிய கீதம் இசைத்து கொண்டிருந்தப் போது கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ சமூகவலைத் தளத்தி மிகவும் வைரலானது....

ஸ்பிரிட் ஆஃப் த கேம் விருதை எதற்காக தோனி வென்றார் தெரியுமா? – வீடியோ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனை உள்ளிட்ட விருதுகளை அளித்து வருகிறது. இதற்காக தனது வலைத்தளத்தில் இணையதள வாக்கெடுப்பும் நடத்தியது. அதில் கிட்டதட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு மேல் பங்கேற்று தங்களின் வாக்குகளை அளித்தனர். இந்நிலையில் இன்று அந்த விருதுகளின் முடிவை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்தத் தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல ‘தசாப்தத்தின்...

புஜாரா தொடர்பான இனவெறி பட்டப் பெயரை வர்ணனையின் போது எடுத்த வார்ன்

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய வீரர் புஜாரா பேட்டிங் செய்த போது அவருடைய பட்டப் பெயர் தொடர்பாக வர்ணனையில் இருந்த ஷேன் வார்ன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வீரர் புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். அப்போது இவர் யார்க்‌ஷேர் அணிக்காக விளையாடினார். அங்கு இருந்த வீரர்கள் இவரை ‘ஸ்டீவ்’ என்று அழைத்துள்ளனர். ஆனால் சமீபத்தில் இந்தப் பெயரை...

யுகேசி தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கும் அதிரடி நாயகன் யுவராஜ் சிங் !

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் யுவராஜ் சிங். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் இடது கை சுழற்பந்துவீச்சு ஆகியவற்றின் மூலம் இந்திய அணியை பல முறை வெற்றிப் பாதைக்கு யுவராஜ் சிங் அழைத்து சென்றுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இதன்பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளையாடி வந்தார். எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் சமீப காலங்களில் அவர் மீண்டும்...

விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தனுஷ்?

தனுஷ்-விஸ்வநாதன் ஆனந்த்
இந்தியாவின் செஸ் ஜாம்பவான் வீரர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் சமீபத்தில் தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாள் அன்று விஸ்வநாதனின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது என்ற செய்திகள் வெளியாகின. இதனை கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாரப்பூர்வமாக வெளிவந்த அறிவிப்பு உறுதியாக்கியது. இந்தப் படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். இதனை சன்டையல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கலர் யெல்லோ  தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டும் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தும் தனது ஒப்புதலை அளித்துள்ளதாக...

இன்ஸ்டாகிராம் உலக பிரபலங்கள் பட்டியலில் டாப்-25 இடங்களுள் வந்த கோலி,அனுஷ்கா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பின் தொடரப் படுகிறார். இவர் கிரிக்கெட் களத்தில் சாதனைப் படைப்பது போல சமூக வலைத்தளம் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றிலும் சாதனைப் படைத்துள்ளார். அந்தவகையில் தற்போது உலகளவில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி இடம்பிடித்து அசத்தியுள்ளார்.   View this post on Instagram   A post shared by Virat Kohli (@virat.kohli) உலகளவில் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் கணக்குகள் பட்டியலில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரோனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். இந்தப்...

எல்பிஎல்: டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த இரண்டாவது இந்தியர் இர்ஃபான் பதான் !

இர்ஃபான் பதான்
இலங்கை நாட்டில் லங்கா பிரீமியர் லீக் என்ற டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இர்ஃபான் பதான், முனாஃப் பட்டேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் களம் கண்டுள்ளனர். இந்நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் இர்ஃபான் பதான் டி20 போட்டிகள் வரலாற்றில் ஆல்ரவுண்டராக சாதனைப் படைத்துள்ளார். அதாவது இர்ஃபான் பதான் டி20 போட்டிகளில் இதுவரை 2000 ரன்களை கடந்துள்ளார். அத்துடன் 173 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 2000 ரன்களுக்கு மேல் அடித்து 150 விக்கெட்களையும் வீழ்த்திய...

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற தமிழ்நாட்டின் இளவேனில்!

இந்திய தொழில் சங்ககளின் கூட்டமைப்பான எஃப்.ஐ.சி.சி ஆண்டு தோறும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனை விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஆடவர் பிரிவில் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வென்றார். மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார். 1/2 I would like to thank my family for...

வீடியோ: ‘எனக்கு ஆக்ரோஷமாக இருக்க தெரியாது’- யார்க்கர் நாயகன் நடராஜன்!

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான டி20 தொடர் நேற்று முடிந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இத்தொடரை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் தமிழக வீரர் நடராஜன். இவர் இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் நேற்றைய கடைசிப் போட்டிக்கு பிறகு தொடர் நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஹர்திக் பாண்ட்யா நடராஜனிடம் அளித்தார். அவரை பொருத்தவரை பந்துவீச கடினமான சூழல் இருந்தப் போது அதில் சிறப்பாக...